Dance Jodi Dance: தீக்குச்சியை பற்ற வைத்து வாயில் போட்ட பெண்- வாயை பிளந்த நடுவர்கள்
தீக்குச்சியை வைத்து நடனத்தை ஆரம்பித்த பெண்ணின் திறமையை கண்டு நடுவர்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர்.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
நடுவர்களை வியக்க வைத்த பெண் போட்டியாளர்
இந்த நிலையில், பல போட்டியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.
அதில் சென்னையை சேர்ந்த கிர்த்திகா என்ற பெண் கலந்து கொண்டுள்ளார். அவர் நடனம் ஆரம்பிக்கும் பொழுது தீக்குச்சியை பற்ற வைத்து வாயில் போட்டு அணைத்துள்ளார். இந்த காட்சி நடுவர்கள் மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடனம் முடிந்த பின்னர் மேடையில் அவருடைய குடும்பத்தினர் கொடுத்த அலப்பறைகளை கண்டு, நடுவர்களும் வயிறு குலுங்க சிரிக்கிறார்கள்.
இப்படியாக இந்த சீசனுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |