சுகர் நோயாளியையும் நாவில் எச்சில் ஊற வைக்கும் பாசிப்பருப்பு சுண்டல்... உடனே செய்து ருசியுங்கள்
அனைத்து வகையான பருப்பு வகைகளையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு பாசிப்பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதில் உள்ள அனைத்து குணங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இன்று நீரிழிவு நோயாளிகள் விரும்பி ருசிக்க கூடிய சத்தான பாசிப்பருப்பு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசிப் பருப்பு - 1 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவைகேற்ப
- தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
பொடி செய்ய
- தனியா- 1 கைப்பிடி
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - சிறிய துண்டு

தாளிக்க
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
பாசிப் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
பொடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
கடைசியாக, பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.
இப்போது சத்தான ஸ்நாக்ஸ் பாசிப் பருப்பு சுண்டல் ரெடி.