தினமும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் என்ன நடக்கும்?
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ளாமல் இருப்பதால் பல வகைகளில் சிக்கல்கள் உருவாகிறது.
அதில், ஒன்று தான் தாம்பத்தியம். தாம்பத்திய வாழ்க்கை மன நிறைவு மட்டுமின்றி முழு உடல் ஆரோக்கியத்துக்கும் வழி வகுக்கிறது. அது மட்டுமின்றி அடிக்கடி தாம்பத்தியம் மேற்கொள்வது நல்லது இல்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது.
உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
முதலில், கணவன் மனைவி உறவில் இதயத் துடிப்பு வேகமாகிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டம் வேகமாக பாய்கிறது. அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. அடுத்ததாக, தினமும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சிதரும் ஹார்மோன்கள் அளவு அதிகரிக்கிறது.
குறிப்பாக மகிழ்ச்சிக்குக் காரணமாக ஆக்சிடோசின், எண்டார்பின் போன்றவை அதிகரிக்கிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதன் மூலம் வாழும் காலம் அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது.
நாள் முழுவதும் புத்துணர்வு, ஆற்றல் இருக்கும். மேலும், மன அழுத்தம் குறைவதால் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
தொடர்ந்து ஸ்டிரஸ் ஹார்மோன் சுரப்பு குறைவதால் உயர் ரத்த அழுத்தம் முதல் பல்வேறு பாதிப்புகளுக்கான வாய்ப்பு குறைகிறது.
தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன், சருமத்தில் தேங்கிய நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பொலிவடையும்.