ராசிகளுக்குள் இப்படியோரு போராட்டமா? மனிதனின் மணிநேர ராசிப்பலன்!
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
இவ்வாறு கணிக்கப்படும் ராசிப்பலன்கள் ஒருவரின் வாழ்க்கையின் எண்ணற்ற மாற்றங்களை செய்கின்றது.
திருமண வாழ்க்கை, திருமணமாகியவர்களுக்கு குழந்தை பாக்கியம், தொழில், இடம் மாற்றம், வேலையில் பதவியுயர்வு என அத்தணை விடயங்களிலும் இந்த ராசிகள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில் ஜீன் மாத நடு இலையில் இருக்கும் நாம் இந்த மாதத்தில் பல போராட்டங்களுக்குள் சிக்க போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
போராட்டங்களுக்கு மத்தியில் தவழும் ராசிக்காரர்கள்
1. மேஷ ராசியில் பிறந்த அன்பர்கள்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் பண வரவு அதிகமாக இருக்கும். வியாபாரங்களில் நம்பி முதலீடு செய்யலாம். தொடர்ந்து பணியில் மிகுந்த போராட்டங்கள் இருக்கும். இதனால் செய்யும் வேலைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
2. ரிஷப ராசியில் பிறந்த அன்பர்கள்
பொதுவாக இன்றைய தினம் வியாபாரங்கள் மற்றும் பணிகளுக்கு போகும் அன்பர்களுக்கு போராட்டமாக இருக்கும். இதனால் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நீண்ட நாட்கள் தீராமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
3. மிதுன ராசியில் பிறந்த அன்பர்கள்
பணி செய்யும் இடத்தில் இன்றைய தினம் உங்களுக்கு போராட்டமாக இருக்கும். குழுவாக சேர்ந்து வேலைச் செய்ய ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஆனாலும் நீங்கள் அதனை செய்து தான் ஆக வேண்டும் அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
4. கடக ராசியில் பிறந்த அன்பர்கள்
இலாபம் வரும் போது கவனமாக இருக்க வேண்டும். திட்டங்கள் என்னவாக இருந்தாலும் இரகசியம் பேண வேண்டும். மக்களின் நலன் கருதி சில வேலைகளில் இறங்கும் போது அங்கு சில பிரச்சினைகள் போராட்டங்களாக வரலாம். இதனால் எதுவாக இருந்தாலும் பொறுமையை கையாள வேண்டும்.
5. சிம்ம ராசியில் பிறந்த அன்பர்கள்
வணிகம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கும். இதனால் இது போன்ற நேரங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். விரைவாக பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தால் இழப்பு ஏற்படலாம்.