ஒரே ஒரு ஆப்பிள் தினமும் சாப்பிடுங்க... எதிர்பாராத மாற்றம் நிகழும்
அதிகளவில் சத்துக்கள் கொண்ட பழங்களில் ஆப்பிளும் ஒன்றாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பழங்களில் அதிகமான வைட்டமின்கள் காணப்படுகின்றது.
ஏகப்பட்ட வைட்டமின்கள், புரோட்டீன்களைக் கொண்ட ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நாம் நிச்சயம் மருத்துவரிடம் செல்லவே வேண்டாமாம்.
ஆப்பிளின் நன்மைகள் என்ன?
ஆப்பிள் புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் ஆபத்தினை நீக்குவதுடன், மூளையின் ஆரோக்கியத்தையும் எடை இழப்பையும் மேம்படுத்துகின்றது.
பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கின்றது.
ஆப்பிள்களை சாப்பிடுவது Level 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆப்பிளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நுரையீரல், மார்பக மற்றும் செரிமான பாதை புற்றுநோய்களை எதிர்த்து போராடுகின்றன.
சிலருக்கு ஆப்பிள் ஒவ்வாமையானதாகவும், அதீத குளிர்ச்சியளிக்க கூடியதாகவும் உள்ளது.
ஆப்பிளை சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது. சருமத்தை இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |