இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க... கெட்ட கொலஸ்ட்ராலுக்கு எதிரியாம்
நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நமது உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகள் என இரண்டு காணப்படுகின்றது. கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதால் நல்ல கொழுப்பின் சக்தி அதிகரித்து, நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை தண்ணீரைப் போன்று வெளியேற்ற முடியும்.
இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவு
நல்ல கொழுப்பின் அளவு பொதுவாக 40 மி.கி/டெ.லிட்டருக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு, 40 மி.கி/டெ.லிட்டருக்கு மேலும் பெண்களுக்கு, 50 மி.கி/டெ.லிட்டருக்கு மேலும் இருப்பது நல்லது.
என்ன உணவை எடுத்துக் கொள்ளலாம்?
இலவங்கப்பட்டை நல்ல கொழுப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்ட் பண்புகள் இருக்கின்றது. தேநீரிலோ, உணவில் மசாலாகவே சேர்த்துக் கொள்ளலாம்.
இதே போன்று பூண்டிலும் அழற்சி எதிர்ப்பு, ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளதால், நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய நோய் அபாயத்தையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். மேலும் ரத்த நாளங்களை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.
மீன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன.
அவகேடோவில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆகையால் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் இதை அவ்வப்போது உட்கொள்ளலாம்.
ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாக உள்ளன. இவை HDL கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன, மேலும், இவை இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
