தினமும் ஒரு வாழைப்பழம் கட்டாயம் எடுத்துக்கோங்க... ஏராளமான நன்மையைக் காணலாம்
தினமும் ஒரு வாழைப்பழம் நாம் எடுத்துக் கொண்டால் உடலில் பல ஆரோக்கிய நன்மையினை கண்கூடாக நாம் அவதானிக்க முடியும்.
வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றது. உடலுக்கு உடனடியான ஆற்றலை அளிக்கின்றது.
இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற வைட்டமின்களும் அதிகமாக தாதுக்களும் அடங்கியிருக்கின்றது.
தினமும் ஒரு வாழைப்பழம் நாம் எடுத்துக்கொண்டால் உடம்பில் பல மாற்றங்களை அவதானிக்கலாம்.
தினமும் ஒரு வாழைப்பழம்
மதியம் அல்லது இரவு உணவிற்கு பின்பு வாழைப்பழம் எடுத்துக் கொண்டால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாவதுடன், மலச்சிக்கலும் தடுக்கப்படுகின்றது.
வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தினை சீராக்குவதுடன், மூலநோயால் ஏற்படும் பிரச்சனையையும் குறைக்கின்றது.
வாழைப்பழங்கள் இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைப்பதுடன், உடம்பிற்கு உடனடியான ஆற்றலைக் கொடுத்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |