தினமும் குளித்தால் ஆபத்தா? பலரும் அறியாத அதிர்ச்சி உண்மை
நாம் தினமும் குளிப்பது தீங்கு விளைவிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
தினமும் குளிப்பது தீமையா?
நாம் நம்மை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு அன்றாடம் குளிப்பதை முக்கிய பழக்கமாக வைத்திருக்கின்றோம். இந்திய கலாச்சாரத்தில் குளிப்பது புனிதமாக கருதப்பட்டாலும், இவை தீங்கு விளைவிக்கும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை என்று விஞ்ஞானம் கூறுகின்றது.
தினமும் குளிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தோல்நிபுணர்கள் கூறும் நிலையில், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், தீங்கு விளைவிக்கவும் செய்யும் என்று கூறுகின்றனர்.
குளிப்பதால் என்ன பிரச்சினை?
குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு தீமை தான் அதிகம் ஏற்படுமாம். சுடுதண்ணீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவதுடன், உடம்பில் இயற்கையான எண்ணெய்யையும் நீக்குகின்றதாம்.
குறித்த எண்ணெய்யானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பொருளாக இருப்பதாக அறிவியல் கூறுகின்றது.
தினமும் சுடுதண்ணீரில் குளிப்பதால் நகம் சேதமடைந்துவிடுகின்றது. மேலும் நகத்தில் ஆணி ஏற்படவும் வாய்ப்புள்ளது. தினமும் குளிப்பதால் சருமம் வறண்டு தோல் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றதாம்.
குளிக்கும் பழக்கம் என்பது ஒரு நபரின் மனநிலை, வெப்பநிலை, தட்பவெப்பநிலை, பாலினம் மற்றும் சமூக அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். இந்தியாவில் பெரும்பலும் சமூக அழுத்தத்தினால் மக்கள் தினமும் குளிக்கின்றனராம்.
மேலும் நாம் தினமும் குளிப்பது தண்ணீரை வீணாக்குவது மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தீங்கு விளைவிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |