குளிக்கும் போது அதை செய்கிறீர்களா? எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
குளிக்கும் போது பலரும் பல தவரை செய்கிறார்கள். குளிக்க தொடங்கும் போது, முதலில் தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்றி குளிப்பது தவறான செயல் ஆகும்.
இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலான இல்லங்களில் ஷவர் வைக்கும் நிலை வந்துவிட்ட நிலையில், நேரடியாக தலையில் நீரை ஊற்றி குளிப்பது உடலுக்கு தீங்கானது என மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.
குளிக்கும் முறை
முதலில் குளிக்க செல்லும்போது நீரினை உச்சந்தலையில் தெளித்து, கால்களில் தண்ணீரை ஊற்றி அறைவெப்ப நிலையை நமது மூளைக்கு சமிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.
அதன் பின்னர், இரண்டு உள்ளங்கைகளிலும் நீரினை ஊற்றினால், அது வெப்பநிலையை நமது மூளைக்கு உணர்த்தும். தொடர்ந்து, தொடை வரை நீரை ஊற்றி, மார்பு வரை நீரை ஊற்றி என தலைக்கு வர வேண்டும்.
இவ்வாறு குளிக்கும் பட்சத்திலேயே உடலின் வெப்பம் காது, கண்கள் வழியே வெளியேறும். தொடக்கத்திலேயே தலை, தோள்களில் நீரை ஊற்றினால், உடலின் வெப்பம் வெளியேறாது.
பிக்பாஸ் அல்டிமேட்டில் டைட்டில் வின்னராக போவது இவரா?
தவறான பழக்கம்
நாம் குளிப்பதே உடலின் வெப்பத்தை குளிர்விக்கும், உடலில் உள்ள அழுக்குகளை வெயியேற்றவும் தான். எனவே குளிர்ந்த நீரில் குளிக்கும் பட்சத்தில், உடலின் வெப்பம் வெளியேற்றப்படும்.
தொடர்ந்து, வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் நலம். நல்லெண்ணெயை மிதமான சூடாக்கி, அதில் தோல் நீக்கிய இஞ்சி, மிளகு சேர்த்து ஆற்றி, அந்த எண்ணெயை தேய்த்து, மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும்.
தினமும் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு பிற வேலைகளை தொடங்கினால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். சாப்பிட்டுவிட்டு குளிக்க கூடாது. எந்த நேரத்திலும் அவசர குளியல் என்பது கூடவே கூடாது.