ஒரே ஒரு குரங்கு பொம்மையால் தந்தையின் ஜோலியை முடித்த மகன்...இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
ஹாங்காங்கில் உள்ள பொம்மை கடையில் சிறுவனின் செயலால் விலை உயர்ந்த பொம்மை உடைந்து விட்டதாக பணம் வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றது.
ஹாங்காங்கின் மோங்காக் மாவட்டத்தில் உள்ள லாங்ஹாம் பிளேஸ் ஷாப்பிங் மாலில் சிறுவன் ஒருவர் கனமான பொம்மை உடைத்துள்ளார்.
சொட்டை விழுந்த இடத்தில் வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுன்னா முடி கிடுகிடுன்னு அடர்த்தியா வளருமாம்!
அந்த ஷாப்பிங் மாலில் உள்ள பொம்மைக் கடையிலிருந்து செங் என்ற நபர் ஒரு அழைப்பில் கலந்து கொள்ள வெளியே சென்றுள்ளார்.
திரும்பி வந்து தனது மகனிடம் சென்றுள்ளாரை். சிறுவன் உடைந்த தங்க குரங்கு சிலைக்கு அருகில் நிற்பதைக் கண்டுள்ளார்.
இதற்குப் பிறகு, கடை உரிமையாளரும் ஊழியர்களும் செங்கின் மகன் சிலையை உடைத்து விட்டதாக இழப்பீடு வழங்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அவர் $ 33,600 (சுமார் ரூ. 3,29,926) செலுத்தி விட்டு சென்றுள்ளார். பிறகு இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.
காணொளி வெளியான பின்புதான் அந்தச் சிறுவன் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒதுங்கிய போது பின்னால் இருந்த அந்தப் பொம்மை கீழே விழுந்து நொறுங்கிய விடயம் தெரியவந்துள்ளது.
பிறகு சிறுவனின் பெற்றோரிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை அந்த கடையின் உரிமையாளர் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறிவருகின்றது.