இமானுக்கு 2ஆவது மனைவி கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா?
இமானின் இரண்டாவது மனைவி “தன்னுடைய கணவர் இப்படி தான்” என சில கருத்துக்களை அவரின் ரசிகர்கள் முன் பகிர்ந்துள்ளார்.
இமான்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் டி இமான்.
இவர் முதல் மனைவியான மோனிகாவை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக அமலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இமான் - மோனிகாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இப்படியொரு நிலையில், அமலிக்கு முதல் கணவருடன் பிறந்த பெண் குழந்தையொன்று இருக்கின்றது. இமான் அந்த குழந்தையையும் தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டாராம்.
தற்போது இமான் பார்த்திபன் இயக்கி வரும் “டீனஸ்” என்ற படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இதனை இமான் பிறந்த நாள் அன்று கொண்டாடியுள்ளனர்.
2 ஆவது மனைவி என்ன சொன்னார் தெரியுமா?
அப்போது இமானின் இரண்டாவது மனைவி தன்னுடைய கணவர் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, “ என்னுடைய கணவர் மிகவும் நல்லவர். அவர் செய்யும் வேலைகள் மற்றவர்களை பாதித்து விடக் கூடாது என கவனமாக நடந்து கொள்வார். சத்தமாக கூட இதுவரையில் என்னிடம் பேசியதில்லை.
அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவர், அனைவரும் ஒரே குடும்பம் என நினைப்பார், அவருடைய வாழ்க்கையில் முதல் இடம் அவருடைய மகளுக்கு தான். இரண்டாவது இசை, மூன்றாவது இடம் தான் எனக்கு தருவார். அவர் இசையமைத்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இமான் எனக்கு கொடுத்த முதல் பரிசு ஒரு பைபிள். நான் என்னுடைய மகளுடைய பற்களை சேகரித்து வைத்திருக்கிறேன் அதில் ஒன்றை தான் முதல் பரிசாக கொடுத்தேன். இமான் ரொமன்டிக்கான மனிதர். எனக்கு ஏதாவது சப்ரைஸ் கொடுத்து கொண்டே இருப்பார். இமான் போல் ஒருவர் கணவராக கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..” என நெகிழ்ச்சியாக பேசினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |