CWC ஷோவிலும் இப்படியா? மாதம்பட்டி ரங்கராஜ் மீது புதிய சர்ச்சை
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜிடம் ஷபானா எதுவும் பேசாமல் இருந்தது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குக் வித் கோமாளி 6
பிரபல தொலைக்காட்சியில் மிக பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது சீசனில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
அந்த வகையில் இறுதிச் சுற்றுக்கான போட்டியாளர்கள் கடந்த வாரங்களில் தெரிவுச் செய்யப்பட்ட போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்படியும் பண்ணுவாரா?
இந்த நிலையில், முக்கிய நடுவர்களில் ஒருவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவதாக ஜாய் கிறிஸில்டா என்ற பெண்ணை திருமணம் செய்து அவரை கர்ப்பமாக்கி விட்டு, தற்போது முதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த பிரச்சினை இணையத்தில் பலரின் கவனத்திற்கு சென்றுள்ள வேளையில், நிகழ்ச்சியின் முதல் பைனலிஸ்ட்டாக ஷபானாவும், இரண்டாவதாக ராஜுவும், மூன்றாவதாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களில் மக்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்று விளையாடிக் கொண்டிரக்கும் ஷபானா இந்த வாரம் தன்னுடைய வெப்சீரிஸ் புரோமோஷனுக்காக வந்திருந்த போதிலும் ரங்கராஜ் மற்றும் குரோஷி இருவரிடமும் பெரிதாக பேசாமல் தள்ளி இருந்தார் என்பதையும் கவனிக்க முடிந்தது.
இப்படியான பிரச்சினைகள் தொடர்ந்தால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவரில் இருந்து ரங்கராஜ் நீக்கப்படலாம் என்ற பேச்சும் அடிப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |