CWC பவித்ரா லட்சுமிக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்களுக்கு அவரே வெளியிட்ட பதிவு
முகமெல்லாம் ஒடுங்கிய நிலையில் பவித்ரா லட்சுமியின் புகைப்படங்களை பார்த்து பதறிப்போன ரசிகர்களுக்காக அவரே பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
பவித்ரா லட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதில் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பவித்ரா லட்சுமி.
அவர், நடிகர் சதிஷ் ஜோடியாக “நாய் சேகர்” என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் நல்லதொரு வரவேற்பை தரவில்லை என்பதால் தற்போது ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
நடிப்பு, சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் பவித்ரா லட்சுமி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்வார்.
அவருக்கு என்ன ஆச்சு?
இந்த நிலையில், பவித்ரா லட்சுமி கடைசியாக வெளியிட்ட காணொளியில், அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பவித்திரா ஒரு பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னை பற்றி வதந்திகள் பரப்ப வேண்டாம்..” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த பலரும், "அவருக்கு என்ன ஆச்சு? இவரது முகம் எவ்வளவு மாறிவிட்டது" என பலவிதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |