முத்தழகு சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சா? ஸ்டோரியால் அதிர்ச்சியான ரசிகர்கள்
சீரியல் நடிகை ஷோபனா, கழுத்தில் தாலியுடன் இருக்கும் திருமணப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஷோபனா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய முத்தழகு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் தான் நடிகை ஷோபனா.
இவர் நடிப்பில் ஒளிபரப்பாகிய சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் 'மீனாட்சி சுந்தரம்' என்ற சீரியலில் வயதான ஒருவரை திருமணம் செய்வது போன்ற ப்ரோமோ ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பட்டது.
இந்த சீரியலுக்காக ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பும் உள்ளது.
தாலியுடன் வெளியான பதிவு
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷோபனாவின் ப்ரோமோவை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்த போது அதற்கு ஒருவர், “ பொண்டாட்டி என்னடா இதெல்லாம்..” எனக் கருத்து பகிர்ந்திருந்தார்.
அதற்கு ஷோபனா,“ நான் எப்போதும் உன்னுடைய பொண்டாட்டி தான் புருஷ்..” என பதில் கருத்து பகிர்ந்திருந்தார். இதனை கவனித்த இணையவாசிகளை பதிவை வைரலாக்கி வந்தனர்.
இதனை தொடர்ந்து கருத்து பகிர்ந்த நடிகருடன் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷோபனா நேற்றைய தினம் பகிர்ந்திருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த சின்னத்திரை நடிகர்கள், “முத்தழகிற்கு திருமணம் முடிந்து விட்டதா? கணவர் இவர்தானா?” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

