அடுத்தடுத்து சப்ரைஸ் கொடுக்கும் CWC புகழ்.. மகள் செய்த மூன்றாவது உலக சாதனை
CWC புகழின் அன்பு மகள் ரிதன்யா மூன்றாவது தடவையாக உலக சாதனை படைத்த செய்தி இணையவாசிகளிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சீசன் 6 ஆரம்பம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குடும்ப பெண்களின் அதிக கவனத்தை தொட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான புகழ், சினிமாவில் வாய்ப்பு தேடி அழைந்த காலப்பகுதியில் கார், லாரி, போன்ற வாகனங்களில் கிளீனராக வேலை செய்த புகழ், அதன் பின்னர் ஹோட்டலில் சர்வர் வேலையும் பார்த்திருக்கிறார்.
பல போராட்டங்களுக்கு பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து முன்னேறிய புகழ், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

அப்போது புகழுக்கு உதவியாக வடிவேல் பாலாஜி இருந்தாகவும், அவருக்கு நன்றி மறக்காமல் இருப்பேன் என்றும் புகழ் பல இடங்களில் கூறியிருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தா தா 87, கைதி, காக்டைல், சப்வே, சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல் விசேஷம், யானை, ஏஜெண்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, கடைசி காதல் கதை, அயோத்தி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
999 கார்களில் புகழுக்கு ஜாக்போட்
இந்த நிலையில், சின்னத்திரை, வெள்ளித்திரை படங்கள் என பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் இருக்கிறார்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹிந்திரா நிறுவனம் பேட் மேன் ரசிகர்களுக்காக கார் ஒன்றை லான்ச் செய்துள்ளது. இந்த கார் 999 மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதில், ரூ.33 லட்சம் பெறுமதியான காரை புகழ், மகள் மற்றும் மனைவிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.

இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
மகள் செய்த சாதனை
இதனை தொடர்ந்து புகழின் அன்பு மகள் ரிதன்யா பிறந்து, 1 வயது 1 மாதம் ஆன நிலையில், 2 கிலோ எடையுள்ள டம்பலை பிடித்தவாறு 10 மிட்டர் நடந்து சென்று உலக சாதனை படைத்தார். இவர் இதற்கு முன்னர் இதே போன்று இரண்டு தடவை உலக சாதனை படைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |