999 கார்களில் CWC புகழ் அடித்த ஜாக்போட்- சொகுசு காரின் விலை எவ்வளவு தெரியுமா?
CWC புகழ் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீசன் 6 ஆரம்பம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குடும்ப பெண்களின் அதிக கவனத்தை தொட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.அத்துடன் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 6 பிரமாண்டமாக தொடங்கிய வேளையில், நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு இருந்தார்கள். 6 ஆவது சீசனில் மூன்றாவதாக செஃப் கௌசிக் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இருப்பவர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். வெற்றிகரமாக 6 சீசன்களை முடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி 7ஆவது சீசனுக்கு தயாராகி வருகிறது.
999 கார்கள் மாத்திரமே அறிமுகம்
இந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் புகழ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பலரும் புகழுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

புகழ் வாங்கிய காரானது, மஹிந்திரா நிறுவனம் பேட் மேன் ரசிகர்களுக்காக கார் ஒன்றை லான்ச் செய்துள்ளது.
இந்த கார் 999 மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதில், ரூ.33 லட்சம் பெறுமதியான காரை புகழ், மகள் மற்றும் மனைவிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.
கிளீனராக வேலை செய்த புகழ்
சினிமாவில் வாய்ப்பு தேடி அழைந்த காலப்பகுதியில் கார், லாரி, போன்ற வாகனங்களில் கிளீனராக வேலை செய்த புகழ், அதன் பின்னர் ஹோட்டலில் சர்வர் வேலையும் பார்த்திருக்கிறார்.
பல போராட்டங்களுக்கு பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து முன்னேறிய புகழ், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

அப்போது புகழுக்கு உதவியாக வடிவேல் பாலாஜி இருந்தாகவும், அவருக்கு நன்றி மறக்காமல் இருப்பேன் என்றும் புகழ் பல இடங்களில் கூறியிருக்கிறார்.
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தா தா 87, கைதி, காக்டைல், சப்வே, சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல் விசேஷம், யானை, ஏஜெண்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, கடைசி காதல் கதை, அயோத்தி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |