CWC 6: இனி வரமாட்டேன்.. KPY சரத்துக்கு நடந்த அவமரியாதை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப்போவதாக KPY சரத் பகிர்ந்த அதிர்ச்சி தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளது.
ஆறாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த வேலையில், ஏற்கனவே பிக்பாஸ் டைட்டில் வென்ற ராஜு தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
ஹை லைட்டே சமையல் நிகழ்ச்சியை கூட காமெடி நிகழ்ச்சியாக மாற்றிய பெருமை ராஜுவையே சாரும்.
KPY சரத் போட்ட பதிவு
இந்த நிலையில், நிகழ்ச்சியில் குக்குகள் மாறினாலும் கோமாளிகள் மாறாமல் அப்படியே இருப்பார்கள்.
இப்படி பிரபலமானவர்கள் தான் பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை ஆகியவர்கள். அதிலும் குறிப்பாக கோமாளியாக இருந்த பாலா தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
சிவாங்கியும் குக்காக இருந்து, தற்போது பாடகியாக வலம் வருகிறார். ஆனால் சுனிதா, KPY சரத் இருவரும் ஆறு சீசனிலும் கோமாளியாகவே இருந்து வருகிறார்கள்.
இதற்கு விளக்கம் கொடுத்த KPY சரத், குக் வித் கோமாளி சீசன் 6 என பதிவிட்டு, “மதியாதோர் வாசல் மிதியாதே..” என குறிப்பிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடியும் பொழுது ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என இதில் இருந்து தெளிவாகியுள்ளது.
மணிமேகலை போன்று இவரும் ஏதாவது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பாரா? என சின்னத்திரை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |