குஷி பட ஜோதிகா போல் ஒய்யாரமாக குளிக்கும் நாய்! அந்த கியூட் ரியாக்ஷனை நீங்களே பாருங்க
குஷி திரைப்படம் ஜோதிகாவைப் போல் குளிக்கும் போது கும்மாளம் போடும் நாயின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தை அலங்கரிக்கும் விலங்குகள் வீடியோ
தற்போது சமூக வலைத்தளங்களில் எம்மை வியக்கவைக்கும் , சிந்திக்க வைக்கும் வீடியோக்கள் பகிர்வது வழக்கமாகியுள்ளது.
காரணம் என்ன தெரியுமா விலங்குகள் மனிதர்களைப்போல் விந்தையான விடயங்களை செய்து வருகிறது.
இதனை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். மேலும் நாம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் பெரும்பாலும் குளிக்கிறது என்பது மிகவும் அரிதான விடயம்.
இவை குளிக்க வைப்பதற்கு வீட்டிலுள்ளவர்கள் பெறும் பாடுபடுவார்கள். ஆனால் சில வீடுகளில் இருக்கும் நாய்கள் அதுவாகவே குளித்துக் கொள்ளும்.
ஒய்யாரக் குளியல்
இதன்படி, அழகிய பொன்னிற நாயொன்று வெள்ளை நிற வாளியில் ஏறி, அமர்ந்துக் கொண்டு குழாயை திறந்து விட்டு அழகாக குளிக்கிறது.
இதனை பார்க்கும் போது திரைப்படங்களில் கதாநாயகி அறிமுகம் கொடுக்கும் போது நீரில் ஆட்டம் போடுவது போல் இந்த நாயும் ஆட்டம் போடுகிறது.
மேலும் நாயின் இந்த கியூட்டான ரியாக்ஷனை Buitengebieden என்பவர் The good life.. ?எனக் குறிப்பிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் “இந்த நாய் என்றால் கொஞ்சம் ஒய்யாரமாக தான் குளிக்கிறது ” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
The good life.. ? pic.twitter.com/F4joPHUhNn
— Buitengebieden (@buitengebieden) January 30, 2023