இதை தொட்டால் சாபம் நிச்சயம்...ரகசிய கல்லறையில் எச்சரிக்கை? நடுங்கிப்போன ஆராய்ச்சியாளர்கள்
இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையின் மேலே எழுதப்பட்டிருந்த வாசகங்கள் ஆராய்ச்சியாளர்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இஸ்ரேலின் பீட் ஷியாரிமில் அமைந்துள்ள பிரம்மாண்ட குகைக்கு உள்ளே சிறிய சிறிய குகைகள் இருப்பதை சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த குகைகளில் ஒன்றில் எச்சரிக்கை பலகையுடன் கூடிய கல்லறை இருந்திருக்கிறது.
இது 1800 ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதிர்ச்சியில் உறைந்த ஆராச்சியாளர்கள்
இந்த கல்லறை மேலே சிவப்பு வர்ணத்தில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாம்.
அதில்,"யாகோவ் ஹா'கர் இந்த கல்லறையைத் திறக்கும் எவரையும் சபிப்பதாக சபதம் செய்கிறார். அதனால் யாரும் அதைத் திறக்க மாட்டார்கள். 60 வயது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாசகங்களை கண்டவுடன் திகைத்துப்போன அதிகாரிகள், இறந்தவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக கல்லறையை சோதனை செய்யாமல் விட்டுவிட்டனர்.

குவிந்து கிடக்கும் பழமையான கல்வெட்டுகள்
இஸ்ரேலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய கல்லறை இருந்த இடத்தில் பல்வேறு குகைகள் காணப்படுகின்றன.
இங்கே கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் ரோமானிய காலத்தின் பிற்பகுதியில் அல்லது பைசண்டைன் காலத்தின் தொடக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.
இவை உலகின் பழங்கால கல்வெட்டுகளில் ஒன்றாக UNESCO அமைப்பு சான்றளித்துள்ளது.
இருப்பினும் இந்த கல்லறை பல்வேறு குழப்பங்களை ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் யாக்கோவ் ஹாகர் என்ற பெயரின் பொருள் யாக்கோபு மதம் மாறியவர் (யூத மதத்திற்கு மாறியவர்) என்பதாகும்.
அப்படியானால் அவர் எந்த மதத்திலிருந்து யூத மதத்திற்கு மாறியிருப்பார் என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.