வெறும் வயிற்றில் 7 கருவேப்பிலை... நன்மைகள் ஏராளம்
தமிழர்களின் உணவுகளில் கருவேப்பிலைக்கு முக்கிய இடம் உண்டு என் நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் சாப்பிடும் போது அதை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.
உணவிற்கு சுவையை தருவது மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது கருவேப்பிலை.
இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, டி மற்றும் ஈ, ஆன்டி ஆக்சிடன்டுகள், அமினோ அமிலங்கள் கால்சியம் இதில் அடங்கியுள்ளன.
ரத்தத்தை சுத்தம் செய்யும் கருவேப்பிலை உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது.
கருவேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள வலிகளை நீக்கி நிவாரணம் வழங்குகிறது.
இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன் உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.
மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வெறும் வயிற்றில் சாப்பிடுவதால்
* வெறும் வயிற்றில் கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக்கப்படும்.
* கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது, செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தாராளமாக கருவேப்பிலை சாப்பிடலாம்.
* கருவேப்பிலையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும், இந்த பொடியை காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர சளி பிரச்சனைகள் காணாமல் போகும்.
* மிக முக்கியமாக உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதுடன், முடியை அடர்த்தியாக வளரச்செய்யும்.