முடி வளர்ச்சியை அசுர வேகத்தில் தூண்டும் பானம் - மூன்று வாரம் குடிங்க போதும்
முடி உதிர்தல் மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவை எல்லா வயதினருக்கும் பாலினத்தவர்களுக்கும் பொதுவான பிரச்சனைகளாகும். இதனால்தான் கிட்டத்தட்ட அனைவரும் முடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த முடி உதிர்வதற்கும் வளராமல் இருப்பதற்கும் பலரும் பல காரணங்களை கூறுகிறார்கள்.
சில நேரங்களில் பிரச்சனை உடலுக்குள் இருக்கும்.நீங்கள் பல்வேறு தயாரிப்புகளை முயற்சித்த பிறகும் உங்கள் முடி உதிர்தல் குறையவில்லை என்றால், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவை மேம்படுத்த ஆரம்பியுங்கள்.
உடலில் முடி வளர்ச்சிக்கான சத்துக்கள் இருந்தால் மட்டுமே முடி வளர்ச்சி அதிகரிக்கும். எண்ணெய், காரமான மற்றும் குப்பை உணவைக் குறைத்து, சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும்.
அதற்காக தான் இந்த பதிவில் முடி வளர்ச்சியை தூண்டும் ஒரு பானத்தை தயாரிக்கும் முறை பற்றி பார்க்கபோகிறர்றோம்.
தலைமுடி வளர்ச்சி பானம்
இந்த பானம் தயாரிக்க நெல்லிக்காய் கேரட் பீட்ரூட் அரை அங்குல இஞ்சி புதினா கல் உப்பு போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உப்பு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கழுவி நறுக்கவும். அவற்றை மிக்சியில் போட்டு அரைக்கவும். இப்போது அந்த பானம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இதை வடிகட்டாமல் நேரடியாக குடிக்கவும். மீதமுள்ள பொருட்களையும் நன்கு மென்று சாப்பிடவும். இந்த பானத்தை நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக தயாரித்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
புதிதாக தான் தயாரிக்க வேண்டும். ஏற்கனவே தயாரித்து வைத்து குடிக்க கூடாது. இதை மூன்று வாரம் தொடர்ந்து குடித்தால் உங்கள் தலைமுடி வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |