உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு அழகாக தெரிய வேண்டுமா? கறிவேப்பிலை இருந்தா போதும்
வீட்டில் இலகுவாக கிடைக்கும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கறிவேப்பிலையில் ஆச்சரியமூட்டும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் வைட்டமின் C, A, B, E, அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இதை நிழலில் காயவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.
தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால் பல மடங்கு நன்மை தரும்.
தொப்பை குறைய கறிவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து அதனுடன் புதினா அல்லது கொத்தமல்லி தழைகளை சேர்த்து, மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, வடிக்கட்டாமல் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நார்ச்சத்து உட்பட அன்றைய தினத்துக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைப்பதுடன் தொப்பை வேகமாக குறைந்து நமது நம்பிக்கையை அதிகரிக்கும்.
உடல் பார்ப்பதற்கு அழகாகவும் தெரியும். முடி வளர்கவதற்குரிய ஊட்டச்சத்து இதில் நிறையவே காணப்படுகின்றன. வழுக்கை தலையில் கூட முடியை வரவழைக்கும் சக்தி இந்த கறிவேப்பிலைக்கு உண்டு.
இதை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வர முடி வளருவதுடன் இளநரையும் இல்லாமல் போகும்.
சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் இவ்வாறு பல சத்துக்கள் கிடைப்பதால் அதை பயன்படுத்தும் கடமையும் நம்மிடம் உள்ளது.