கொமடியில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகரின் தற்போதைய நிலை.. ஏக்கத்தில் ரசிகர்கள்
நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக சினிமாவில் வாய்ப்பு என்பது ஒரு காலத்திற்கு மட்டுமே இருக்கும். அந்நிலையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பினை தக்கவைத்துக்கொண்டு, அதன் மூலம் பணத்தினை சம்பாதித்து நடிகர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகின்றனர்.
தற்போது கொமடியில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகரான வெண்ணிற ஆடை மூர்த்தியின் நிலை ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வந்த இவர் தற்போது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றார்.
எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் நடிகர்களுடன் வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார்.
இவர் தனது நகைச்சுவையினாலும், தனது அசத்தலாக நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்தவர் இன்றும் இவரது நடிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து அசத்திய நிலையில், வயது மூப்பு காரணமாக தற்போது நடிப்பதை நிறுத்தியுள்ளார்.
தனது சொந்த வீடான கோட்டூர்புரத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவரை மீண்டும் சினிமாக்களில் பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.