90ஸ் பிரபலம் ஜனகராஜ் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? பலரும் பார்க்காத புகைப்படங்கள்
90ஸ் பிரபலங்களில் ஒருவரான ஜனகராஜின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜனகராஜ்
பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஜனகராஜ் கடந்த1980 களில், தமிழ் சினிமாவில் செந்தில் மற்றும் கவுண்டமணி இருந்த காலத்தில் நடிகராக அறிமுகமானார்.
கூட்டணியில் நடித்தாலும் அவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் தனித்து காட்டியது.
இவர் திரைப்படத் தயாரிப்பாளர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். இதன் பின்னரே இவருக்கு “ கிழக்கே போகும் ரயில்” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போதைய புகைப்படம்
மேலும், சினிமாவிற்குள் வந்த பின்னர் நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திர நடிப்பு என பல்வேறு வேடங்களில் கலக்கி வந்தார்.
அக்காலக்கட்டத்தில் நட்சத்திர நடிகர்களாக மிளிர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் நண்பராக நடித்து பிரபல்யமானார்.
இந்த நிலையில் காலங்கள் செல்ல செல்ல பழைய நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரையிலிருந்து மறைய ஆரம்பித்தனர். இந்த வரிசையில் பல நாட்களாக திரைக்கு வராத ஜனகராஜ் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.
இதன்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |