பிரேக்கப் மெசேஜ்.. குடும்பத்துடன் கொண்டாடிய இளம்பெண்- வியப்பில் இணையவாசிகள்
பிரேக்கப் மெசேஜை அனுப்பி விட்டு, அதை குடும்பத்துடன் கொண்டாடிய இளம் பெண்ணின் காணொளி இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
பிரேக்கப் மெசேஜ்
என்ன செய்தாலும் அதனை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவேற்றுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்படி பதிவேற்றும் காணொளிகள் சில பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும்.
அந்த வகையில் இளம் பெண்ணொருவர் உணவகமொன்றில் குடும்பத்தினருடன் அமர்ந்திருக்கிறார். அப்போது தன்னுடைய செல்போனால் யாரோ ஒருவருக்கு மெசேஜ் அனுப்புகிறார்.
இவர் அனுப்பியதை கூறியதும் பக்கத்தில் இருப்பவர்கள் கைத்தட்டி அதனை கொண்டாடுகிறார்கள். இந்த காணொளியில் குறித்த பெண் பிரேக்கப் மெசேஜ் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்க்கும் பொழுது இவர் ஒருவரோடு உறவை முறித்துக்கொண்டதற்காக தான் இவ்வுளவு பெரிய கொண்டாட்டம் என புரிகிறது.
பொதுவாக இப்படியான நேரங்களில் காதலர்கள், குடும்பத்தினர்கள் மீண்டெழ முடியாத சோகத்தில் இருப்பார்கள். ஆனால் குறித்த வீடியோவில் உள்ள குடும்பம் அதனை வரவேற்றுள்ளது.
இதனாலேயே இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Whole family celebrating the breakup is wild? pic.twitter.com/dNkDAEceDE
— FadeHubb (@FadeHubb) May 9, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |