தயிருடன் மீன் சேர்த்து சாப்பிடக்கூடாது ஏன்? அலட்சியம் வேண்டாம் ஆபத்தாம்
பொதுவாகவே அசைவ உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் நமது உணவு முறையில் இருந்தது கிடையாது. ஏன் இந்த உணவு முறை தவிர்க்கப்பட்டது? இப்போதும் ஏன் தவிர்க்கப்படுகிறது? இதுதொடர்பான காரணங்களை ஆய்வுகளுடன் அடிப்படையில் பார்க்கலாம்.
பண்டைய காலத்தில் நட்புச்சரக்கு மற்றும் பகைச்சரக்கு என்று இருவேறு விதத்தில் உணவுகளை பிரித்து வைத்திருந்தனர். எந்த உணவுடன், எந்த உணவை இணைத்து சாப்பிடலாம்.
அப்படி தயிரையும் மீன் உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது குறித்து பார்க்கலாம்.
தயிர்
பாலில் இருந்து பெறப்படும் தயிரில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12, பொட்டாசியம், கால்ஷியம் உள்ள்ட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த சத்துக்குள் குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அசைவ உணவுகளுடன் சாப்பிடும் போது பாதிப்பு உடனடியாக நிகழக்கூடும்.
பிரியாணிக்கு வைக்கப்படும் தயிர் வெங்காயமும் கூட தவறுதான் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது,
வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது. இதை இரண்டும் சேர்த்து எடுத்துக்கொள்வது உடல்நலனுக்கு கேடாக அமைகிறது.
அதேபோன்று மட்டன், சிக்கன் பிரியாணி செய்யும் போது தயிரை சேர்த்து சமைக்கக்கூடாது என்பதும் ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

தயிருடன் ஏன் மீன் சேர்த்து சாப்பிடக் கூடாது?
தயிரையும் மீனையும் சேர்த்து சாப்பிடக் கூடாது என்று நம்முடைய வீடுகளில் சொல்லப்படுவதுண்டு. ஆனால் தயிர் சோற்றுக்கு தயிரை சேர்த்து சாப்பிடுவது பலரும் விரும்பும் காம்போவாக உள்ளது. அதாவது தயிருக்கு பொதுவாகவே செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு.
சத்து அதிகமான மீனுடன் தயிரை சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் மேலும் மந்தமடையும். இதனால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் மீன் உணவு மூலம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இதுதான் தயிரையும் மீனையும் சேர்த்து சாப்பிடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

அதிகம் புரதம் உடம்புக்கு ஆகாது
மீனுடன் முட்டையையும் சேர்த்து சாப்பிடுவதில் பிரச்னை ஏற்படும். இரண்டும் புரதச்சத்து நிறையவே உண்டு. அவை இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
அதிகளவில் புரதம் உடலில் சேருவது துர்நாற்றத்தை அதிகரிக்கும். மேலும் செரிமானமின்மை, வயிற்று வலி என வயிறு உபாதைகள் உண்டாகும்.
பாலிலிருந்து தயிர் உருவானாலும் இரண்டையும் ஒன்று சேர சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிடி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.