ஒரு கப் சாசரில் இவ்வளவு அபூர்வமான விஷயம் உள்ளதா? பலரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ!
இன்றைய இணைய உலகில் நம்மில் பலரும் அதிகமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் நாளுக்கு நாள் ஏராளமான வினோதமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், ஒரு சாதாரண கப் மற்றும் சாசரை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, கிட்டத்தட்ட 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, பலரையும் ஆச்சரியத்தில் மிரள வைத்துள்ளது.

அப்படி ஒரு சாதாரண கப் எப்படி இவ்வளவு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கலாம். ஆனால், அதே கப்பை சாசர் மீது வைக்கும் போது தான் அதன் அபூர்வமே தெரியும்.
அதாவது அதில், கப் மற்றும் சாசர் என இரண்டிலுமே தனித்தனியே கோடுகள் உள்ளது. இதனால் அந்த கப்பை சாசர் மீது வைத்து, சுற்றிப் பார்த்தால், அதில் பறவை ஒன்று பறப்பது போல தெரியும்.
கோடுகள் மூலம் கப்பில் பறவைகள் பறப்பது போல தோன்றும் நிலையில், பறவை மட்டுமில்லாமல் மற்ற சில விலங்குகளும் இந்த வகையில் தெரிவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த அபூர்வம் தான் கொரியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Woww? pic.twitter.com/cTmDK3HR6c
— Tansu YEĞEN (@TansuYegen) June 20, 2022