weight loss diet: தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்க வெள்ளரிக்காய் இட்லி! பண்ணலாமா?
பொதுவாகவே தற்காலத்தில் சினிமா பிரபலங்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரையில், பலரும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று கடுமையான டயட்டை பின்பற்றி வருகின்றார்கள்.
ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் டயட் உணவுகளின் பட்டியலில் வெள்ளரிக்காய் நிச்சயம் இடம்பிடித்துவிடும். வெள்ளரிக்காய், குறைந்த கலோரிகள், அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்டிருப்பதால், உடல் எடை குறைப்பிற்கு மிகச்சிறந்த உணவாகும்.

வெள்ளரிக்காய் அதிகளவில் நார்ச்சத்தை கொண்டிருப்பதால், இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து பசியை கட்டுக்குள் வைப்பதுடன் செரிமான அமைப்பையும் சீராக பராமரிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
மேலும் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேருவதைத் தடுத்து தொப்பை பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கின்றது.
அப்படி உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என டயட்டில் இருப்பவர்களுக்கு காலை உணவுக்கு ஏற்றவகையில் சுவையான வெள்ளரிக்காய் இட்லி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1 (நடுதர அளவு)
தேங்காய் - 1/4 கப் ( துருவியது)
பச்சை மிளகாய் -2
இஞ்சி - சிறிதளவு
ஊரவைத்த மொச்சை - சிறிதளவு (விரும்பினால்)
தயிர் - சிறிதளவு (விரும்பினால்)
இட்லி ரவை (அரிசி ரவை) - 3 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் வெள்ளரிக்காயை நன்றாகத் துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், 3/4 கப் தேங்காய், இஞ்சி, 2-3 பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்து வெள்ளரிக்காயுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 3 கப் இட்லி ரவை, உப்பு, ஊரவைத்த மொச்சை, சிறிதளவு தயிர் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
அதனையடுத்து அந்த கலவையை அச்சில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் 5 தொடக்கம் 7 நிமிடங்களுக்கு நன்றாக வேகவிட்டு எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் பஞ்சுபோன்ற வெள்ளரிக்காய் இட்லி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |