உடல் எடையை குறைத்து ஒல்லியாக்கும் வெள்ளரிக்காய் சட்னி.. ரெசிபி இதோ
இலகுவில் குணப்படுத்த முடியாத பிரச்சனைகளில் ஒன்றாக எடை அதிகரிப்பு பார்க்கப்படுகின்றது.
இந்த பிரச்சினை மரபியல் காரணங்கள், தைராய்டு பிரச்சனை, முறையற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் எடை அதிகரிப்பு தலையோங்கி நிற்கின்றது.
இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் எடையை குறைப்பதற்கு டயட் உணவுகள் உண்ணல் மற்றும் உடற்பயிற்சி இப்படி ஏகப்பட்ட முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் வெள்ளரிக்காய் சட்னி எப்படி செய்வது என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* வெள்ளரிக்காய் - 1
* கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
* சீரகம் - 1/2 தேக்கரண்டி
* உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
* பூண்டு - 5-6 பல்
* வரமிளகாய் - 4-5
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
* கொத்தமல்லி - 1 கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 2 தேக்கரண்டி
* கடுகு - 1/2 தேக்கரண்டி
* உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
சட்னி தயாரிப்புமுறை
1. வெள்ளரிக்காயை எடுத்து அதனை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
3. வறுத்த கலவையுடன் பூண்டு, வரமிளகாய், புளி சேர்த்து 2-3 நிமிடம் வரை வதங்க விடவும்.
4. இவை வதங்கிய பின்னர் வெள்ளரிக்காய் துண்டுகளை கடாயில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
5. வதங்கிய வெள்ளரிக்காய் துண்டுகளை அப்படியே எடுத்து கொஞ்சமாக ஆறவிட்டு அதனுடன் தேங்காய், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
6. அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஓரமாக வைத்து விட்டு அதற்கு தாளிப்பை தயார் செய்து கலந்து விட்டால் சுவையான வெள்ளரிக்காய் சட்னி தயார்.!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |