கனவுக்கன்னி ரம்பாவா இது? 47 வயதிலும் இளமையாக ஜொலிக்கும் புகைப்படங்கள்
நடிகை ரம்பா சமீபத்தில் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்பா
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.
2010ம் ஆண்டு இலங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்கள், மகன் பிறந்த பின்பு மீண்டும் திரும்ப சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
ரம்பா தனது பிறந்த நாளை முன்னிட்டு தற்போது தனது 3 குழந்தைகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.