4 மொழிகளின் டாப் நடிகையாம்.. பாக்கியலட்சுமி ஈஸ்வரி பாட்டிக்கு இப்படியொரு பின்னணியா?
4 மொழிகளில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது சீரியலில் மாஸ் காட்டும் ராஜ்யலட்சுமிக்கு பிறந்த நாள் என்பதால் அவர் குறித்தான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிறப்பு
கூட்டணியில் நாமினேட் செய்யப்பட்ட அந்தவொரு போட்டியாளர்.. இடையில் தப்பிய விக்ரம்- இப்படி ஒரு ட்விஸ்டா?
இந்தியா - ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி பகுதியில் 1964ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி பிறந்தவர் தான் ராஜ்யலட்சுமி.
இவர் கடந்த தன்னுடைய 15 வயதிலிருந்து சினிமாவில் இருக்கிறார். இவர் சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலத்திலேயே “சங்கராபரணம்” படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இதனை தொடர்ந்து என். டி.ராமாராவ், நாகேஸ்வ ராவ், பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி, ஜிதேந்திரா மற்றும் விஷ்ணு வர்தன் இப்படி 4 மொழிகளில் பிரபலமாக இருந்த நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பின்னர் கே.ஆர்.கிருஷ்ணன் என்பவரை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ரோஹித் கிருஷ்ணன் மற்றும் ராகுல் கிருஷ்ணன் என்று இரு மகன்கள் உள்ளனர்.
தற்போது சினிமாவில் வாய்ப்பு குறைந்த காரணத்தினால் பாக்கியலட்சுமி சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமா சாதனை
சினிமாவிற்குள் தெலுங்கு திரைப்படமான “ சங்கராபரணம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழில், சுஜாதா, மூன்று முகம், எம் மகன்,யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், சைவம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்களை இன்றும் சேர்த்து வைத்துள்ளார்.
மேலும் சீரியல் மூலம் அனைவரின் வீட்டிலும் இன்றும் பேசப்பட்டு வருகிறார். பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாது கஸ்தூரி, பிள்ளை நிலா, செல்லமே, ராஜா ரானி, அழகு, ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்.
இவ்வளவு சாதனைகள் செய்த ராஜ்யலட்சுமி இன்றைய தினம் தன்னுடைய 59 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதன் போது இவர் செய்த சாதனைகள் செய்திகளாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செய்திகளை பார்த்த இணையவாசிகள், “ இவர் பின்னால் இவ்வளவு சாதனைகளா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |