மும்பையில் குடியேற என்ன காரணம்? அதிரடியாய் பதிலடி கொடுத்த ஜோதிகா
மாமனார் குடும்பத்தை விட்டு மும்பையில் குடியேற இது தான் காரணம் என ஜோதிகா ஓபனாக பேசியுள்ளார்.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளின் ஒருவர் தான் சூர்யா - ஜோதிகா.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும் தற்போது இருக்கிறார்கள். ஆனாலும் சினிமாவை விட்டு சூர்யா - ஜோதிகா செல்லவில்லை.
தற்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜோதிகா திடீரென மும்பையில் வீடு வாங்கி அங்கு செட்டிலாகி விட்டார்.
இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருப்பார்களாம்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா?
இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் சூர்யா - ஜோதிகா இது குறித்து விளக்கம் கொடுக்காமல் இருந்தனர். இதனால் மாமனாரான சிவகுமார் நடிக்க வேண்டாம் என கூறியதால் வீட்டை விட்டு வெளியேறினார்கள் என வதந்திகள் அதிகமாக கிளம்பின.
ஜோதிகாவின் பதிலடி
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த ஜோதிகா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, “ திருமணத்துக்கு பின் சரியாக 15 ஆண்டுகள் சென்னையில் இருந்தேன்.
திருமணம் செய்து வந்த பின்னர் பெற்றோர்களின் வீட்டை பெண் பிள்ளைகள் மறந்து விட வேண்டும் என விதி இங்கு இன்னும் எழுதாமல் இருக்கின்றது. கொரோனா நேரங்களில் என்னுடைய பெற்றாரை பார்க்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.
ஆகையால் சூர்யாவிடம் சொன்னதும் அவரும் ஓகே சொல்லி விட்டு மும்பையில் குடியேற சம்மதித்தார். மாறாக நாங்கள் பண்டிகை போன்ற நேரங்களில் ஒன்றாக தான் இருந்து வருகிறோம். இது தற்காலிகமானது தான் சென்னைக்கு விரைவில் வந்து விடுவேன்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஜோதிகா குறித்தான வதந்திகள் கணிசமாக தணிந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |