CSK-வுக்காக கண்ணீர்விட்டு அழுத சிறுமி! தல தோனி என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை அணி வெற்றிப் பெற்றத்தை ஆனந்தக் கண்ணீர்விட்டு கொண்டாடிய சிறுமிக்கு, தோனி பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைப்பெற்றுவரும் நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் அணியாக ஐ.பி.எல் தொடரை விட்டு வெளியேறிய சென்னை அணி, இந்த ஆண்டு கம்பீரமாக திரும்பியுள்ளது.
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை அணி, முதல் குவாலிஃபையர் போட்டியில் டெல்லி அணியுடன் நேற்று மோதியது.
Dhoni's gift to his littles big hearted Fans pic.twitter.com/zbxcPvb9aW
— Ashok Rana (@AshokRa72671545) October 10, 2021
யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ஸ்ரெய்டில் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ராய்டு எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார்.
இந்த நேரத்தில், ஃபார்மில் இருக்கும் ஜடஜேவா உட்கார வைத்துவிட்டு தல தோனி முன்கூட்டியே களமிறங்கினார். ஆட்டத்தில் பரபரப்பு எகிறிக் கொண்டே சென்றது.
இறுதியாக, தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி அபார வெற்றியைப் பெற்று, கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. தோனி, தான் சந்தித்த 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸூம் அடங்கும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியின் பினிஷிங் மைதானத்தில் இருப்பவர்களையும் குதூகலிக்கச் செய்தது. சிறுமி ஒருவர், சென்னை அணி வெற்றிப் பெற்றதும் சந்தோஷம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இதனை மைதானத்தில் இருந்த டிவியில் பார்த்த தோனி, அவருக்கு சர்பிரைஸ் பரிசு கொடுத்து அசத்தினார். அதாவது, தான் கையெழுத்திட்ட மேட்ச் பாலை, அந்த சிறுமிக்கு கொடுத்தார்.