ஒரு பந்தில் வெற்றியை தட்டித்தூக்கிய சிஎஸ்கே... ரசிகரை அடக்கமுடியாமல் திணறிய குடும்பம்
குஜராத் டைடன்ஸுக்கு எதிரான பைனலில் சிஎஸ்கே அபார வெற்றியைப் பெற்றது.
இந்தியாவின் ஹகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி ஆரம்பமானது.
மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டமையால் சென்னை அணிக்கு தற்போது 15 ஓவர்களுக்கு 171 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிலையில், 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியை அவதானித்து ரசிகர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவர் டிவி பக்கத்தில் சென்று தனக்கு தெரிந்த அத்தனை தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு திக் திக் என்று நின்ற நிலையில், வெற்றியை அவதானித்த பின்பு உண்மையில் அவருக்கு அருள் வந்தவர் போன்று ஆக்ரோஷமாகியுள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிரிச்சு செத்துட்டேன்!
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) May 30, 2023
யாரு சாமி நீ? pic.twitter.com/JXYIci37JB