அவர் அதற்கு சரிவரவில்லை! சுரேஷ் ரெய்னாவை எடுக்காததற்கு காரணத்தை கூறிய சிஎஸ்கே நிர்வாகம்
ஐபிஎல் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னாவை எடுக்காத விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த அணிக்காக 12 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட வீரரை தேர்வு செய்யாமல் போனதால் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதைப்பற்றி சுரேஷ் ரெய்னாவும் மனமுடைந்து இனி நான் சமையலில் ஆர்வம் செலுத்தப்போகிறேன்.
இளம்வீரர்களுக்கு இன்றையகாலத்தில் அணியில் இடம்பிடிக்க கூடுதல் சுமை ஏற்படுகிறது என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இவரை தேர்வு செய்யாததற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தெரிவிக்கையில், சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா 12 ஆண்டு காலமாக திகழ்ந்து வந்தார்.
அணியின் தேவையை கருத்தில் கொண்டே ஏலத்தில் செயல்பட முடியும். அணிக்கு தேவைதான் முதன் என புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த உத்தேச அணியில் சுரேஷ் ரெய்னா தேவை இருப்பதாக தெரியவில்லை.
இதனால் அவரை தக்க வைக்க முடியவில்லை. அவரின் இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவது சாதரணமல்ல என தெரிவித்துள்ளார்.