தோனியின் கேப்டனுக்கு பின் சென்னை அணி அசத்தலான வெற்றி!
ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர் தோல்விக்கு பின் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. தொடர்ந்து கேப்டனாக சொதப்பி வந்த ஜடேஜா, தோனியிடமே கேப்டன் பதவியை கொடுத்துவிட்டார்.
இன்றைக்கான போட்டியில் தோனி கேப்டன் பதவியை தொடர்ந்தார். இன்றைய 46 ஆவது லீக் போட்டியில் கேப்டனாக டாஸ் போட மைதானத்திற்கு வந்தார்.
இந்த போட்டியில், டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதலில் விளையாடி முடித்துள்ள சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது.
அருமையாக தொடக்கம் தந்த ருதுராஜ் மற்றும் கான்வே, அரைசதம் அடித்தனர். ருதுராஜ் 99 ரன்களில் அவுட் ஆக, கான்வே 85 ரன்களுடனும், நாட் அவுட் ஆகவு, தோனி 8 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு அதிர்ச்சியான பதிலளித்த தோனி!
அதனைத் தொடர்ந்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் அதிரடியாக முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
அதன் பின்னர், 39 (24) ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே ராகுல் திரிப்பாதி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதனையடுத்து, களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 2 சிக்ஸருடன் 17 (10) ரன்களில் அவுட்டானபோது மறுபுறம் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (37) எடுத்த வில்லியம்சனும் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே, 126/4 என சரிந்த அந்த அணிக்கு கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்து வந்த ஷஷாங்க் சிங் 15 (14) ரன்களிலும் வாசிங்டன் சுந்தர் 2 (2) ரன்களிலும் சென்னையின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்து சென்றனர்.
இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 3 பவுண்டரி 6 சிக்சருடன் 64* (33) ரன்கள் விளாசினாலும் அவருக்கு கைகொடுக்க வேறு பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தால் 20 ஓவர்களில் 189/6 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் போராடி தோற்றது.
மேலும், 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னைக்கு பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 4 விக்கெட்களை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
Blockbuster opening and a ? Climax! What a close to Sunday! ?#SRHvsCSK #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/Z1xrRAPaW8
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2022