உணவிற்காக காகம் செய்த புத்திசாலித்தனமான செயல்... நம்பமுடியாத காட்சி
உலகின் மிக அறிவாளியான பறவை காக்கை மட்டும் தான் என்று கூறும் அளவிற்கு வாயடைக்க வைத்துள்ள இந்த காணொளி.
சின்ன வயது கதையில் காகம் தண்ணீர் அருந்துவதற்கு கற்களை தூக்கி பானையில் போட்டு தண்ணீர் மேலே வந்ததும் குடித்துச் செல்லும் என்று படித்திருக்கிறோம்.
அதன் பின்பு பல காணொளிகளில் காகம் செய்யும் செயல்கள் அனைவரையும் வாயடைக்கவே வைக்கின்றது.
இங்கு காகம் ஒன்று குச்சி ஒன்றினை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது உடைத்துவிட்டு பின்பு மரத்தில் இருக்கும் துளையில் விடுகின்றது.
அதனுள் இருக்கும் புழு ஒன்றினை தனக்கு உணவாக்க காகம் செய்த செயல் அனைவரையும் பிரமிக்கவே வைத்துள்ளது. இக்காட்சியை அவதானித்தவர்கள் உலகில் புத்திசாலியான காகம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகின் மிக அறிவாளியான பறவை காக்கை மட்டும் தான்
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) October 13, 2023
?????????? pic.twitter.com/Sfna0Yc9bn