வீட்டிற்கு அடிக்கடி காகம் ஏன் வருது தெரியுமா? வாஸ்து பார்வையில் விளக்கம்
நம் முன்னோர் சொன்ன ஒரு செய்தியிலும் காரணமில்லாமல் கூற முடியாது. “வீட்டுக்கு காகம் வந்தால், நல்லது நடக்கப்போகிறது” என்பதுபோல் பலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம்.
உண்மையில், பறவைகளும் விலங்குகளும் எதிர்வரும் நிகழ்வுகளை உணரும் சக்தி கொண்டவை என்பது தெரியும். அதில் முக்கியமான பங்கு வகிப்பவை காகங்கள்.
வீட்டில் காகங்கள் வருவதும், அதன் செயற்பாடுகளும் பல அர்த்தங்களை தரும். அவை நேர்மறையாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ இருக்கலாம். இதனை வாஸ்து விளக்கப்படி என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம்.
காகம் கத்தும் ஒலி – பயணத்திற்கு நல்ல அறிகுறி பயணத்திற்கு செல்லும் போது, உங்கள் வீட்டிற்கு அருகே காகம் உரத்த குரலில் கத்தினால், உங்கள் பயணம் வெற்றிகரமாக முடியும் என நம்பப்படுகிறது.
காகம் பறக்கும் திசைகள் – அதன் அர்த்தம்
- மேற்கு நோக்கி பறப்பது: நேர்காணல், வேலை தொடர்பான பயணம் ஆகியவற்றில் வெற்றி வாய்ப்பு அதிகம்.
- வடக்கு அல்லது கிழக்கு நோக்கி பறப்பது: வீட்டிற்கு நெருக்கமான ஒருவர் வரப்போகிறார் என்பதற்கான அறிகுறி.
- தெற்கு பக்கம் அமர்வது: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். இது ஒரு அபாயத்தின் அறிகுறியாக கொள்ளப்படுகிறது.
காகங்கள் கூடி சத்தமாக கத்தினால் - பல காகங்கள் சேர்ந்து சத்தமாக கத்தினால், எதிர்பாராத ஒரு சம்பவம் நேரலாம். உங்கள் செயலில் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம் இது.
காகம் உணவுகளை சாப்பிடுவது – ஆசைகள் நிறைவேறும்! வீட்டிற்கு வந்த காகம் உணவை சாப்பிட்டால், அது உங்கள் மனதில் வைத்த ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
காகங்கள் விலங்குகள் என்றாலும், அவற்றின் நடத்தைகள் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன. வாஸ்துப்படி, இந்த அறிகுறிகளை கவனிப்பது உங்கள் வாழ்க்கையில் நன்மை தரக்கூடியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |