Croup: குழந்தைகளை தாக்கும் சுவாசப்பாதை தொற்று
Croup குழந்தைகளை பாதிக்கும் சுவாசப்பாதை தொற்றாகும். அதாவது, குரல்வளை மற்றும் மூச்சுக்குழாயை சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் நிலையே குரூப்(Croup).
இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவதுடன் குரைப்பது போன்ற சத்தத்துடன் கூடிய இருமலை உண்டாக்குகிறது.
வழமையான ஜலதோஷத்தையும் உண்டுபண்ணுகிறது, இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் பரவும் இந்நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
பெரும்பாலும் parainfluenza virusesகள் குரூப் நோய்க்கு காரணமாகின்றன, இது தவிர adenovirus மற்றும் respiratory syncytial virus ஆகியற்றாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குகிறது, பெரியவர்களை விட அவர்களது சுவாச அமைப்பு எளிதானது என்பதால் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
- மூக்கு ஒழுகுதல், தும்மல்
- காய்ச்சல்
- குரைப்பது போன்ற சத்தத்துடன் கூடிய இருமல்
- மூச்சுவிடுவதில் சிரமம்
- குரல்வளையில் மாற்றம்
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலோ குழந்தைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
இதுதவிர மூச்சுவிடும் போது சத்தம், முழுங்குவதில் சிரமம், மூக்கு- வாய்- நகங்களை சுற்றி தோலின் நிறத்தில் மாற்றம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
ஒரு வாரத்திற்கு மேலாகவோ, அடிக்கடியோ மேல்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தாலும், 103 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருந்தாலும் மருத்துவரை உடனடியாக பார்க்க வேண்டும்.
சிகிச்சைகள்
குரூப் என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரை செய்யலாம்.
லேசான நிலைகளில் வீட்டில் இருந்தபடியே முறையான சிகிச்சைகளின் மூலம் சரிசெய்ய முடியும்.
தீவிரமான நிலைகளில் மருத்துவர் முதலில் வாய் வழியாக எடுக்கப்படும் ஸ்டெராய்ட் மருந்துகளை பரிந்துரைப்பார், இது மூச்சுக்குழாயில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது, 1 அல்லது 2 மருந்துகள் மட்டுமே தேவைப்படும்.
குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் breathing tubeயை பயன்படுத்தலாம். நீரிழப்பை தடுப்பதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.
பக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் குரூப் நோய்க்கு, ஆன்டிபயாடிக் சிகிச்சை தேவைப்படுகிறது, நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

sedentary lifestyle: நீங்க ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா? அப்போ இந்த உடல்நல அபாயங்கள் உறுதி!
வரும் முன் தடுப்பது எப்படி?
பெரும்பாலும் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகளால் மட்டுமே ஏற்படும் என்பதால் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், உடல் சுகவீனத்தால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இல்லாமல் இருத்தல், கைகளை/பொருட்களை வாய்க்கு கொண்டு செல்லாமல் இருத்தல் போன்றவை.
சில நேரங்களில் தட்டம்மை போன்ற நிலைகளும் குரூப்-க்கு காரணமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதும் பெற்றோரின் கடமையே!!!