ராட்சத முதலை செய்த காரியம்! நடுநடுங்கிய மக்கள்... வைரல் காட்சி
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கங்கா ஆற்றில் ஓரம் முதலை ஒன்று நடைபாதை கேட்டில் மீது ஏறி தவித்த நிலையில், இதனை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கால்வாய்க்குள் விட்டுள்ளனர்.
பொதுவாக முதலை நீரிலிருக்கும் போது தான் அனைவருக்கும் பாதுகாப்பு. அதுவே நிலத்திற்கு வந்துவிட்டால் மனிதர்கள் எல்லாம் அலறி தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.
அந்த அளவிற்கு மிகவும் பயங்கரமான விலங்குகளில் ஒன்றாக முதலை இருக்கின்றது. இங்கு முதலையின் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள கங்கா கால்வாயில் இருந்து முதலை ஒன்று வெளியேறியதுடன், அப்பகுதி மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 10 அடி நீளம் கொண்ட இந்த முதலை நரௌரா பகுதியில் உள்ள நடைபாதையில் கேட்டின் மீது ஏற முயற்சிப்பதை வெளியான வீடியோவின் மூலம் காண முடிகிறது. மீண்டும் தண்ணீருக்குள் செல்ல தன்னால் முடிந்த முயற்சிகளை அந்த முதலை செய்கிறது.
பின்பு வனத்துறை அதிகாரிகள் குறித்த முதலையை மீட்டு கங்கா கால்வாய்க்குள் பத்திரமாக விட்டுள்ளனர்.
இப்படி ஒரு ராட்சத முதலையை திடீர் என்று பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் சூழ்ந்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு வனத்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவலை தெரிவித்துள்ளனர். உபியில் உள்ள கங்கா காட் கால்வாய் அருகே உள்ள நடைபாதையில் முதலை வந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் முதலையை பிடித்து மீண்டும் கால்வாயில் விட்டனர்.
