Funny Video: ராட்சத மர பீரோவை பைக்கில் தூக்கிச் செல்லும் நபர்! பதற வைக்கும் காட்சி
மிகப்பெரிய மர பீரோ ஒன்றினை நபர் ஒருவர் அசால்ட்டாக இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சி காண்பவர்களை பதற வைத்துள்ளது.
இன்று சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. அதிலும் சிலரது செயல்கள் நொடிப்பொழுதில் மக்களைச் சென்றடைந்து விடுகின்றது.
தங்களது திறமையை வெளிக்காட்டும் பாலமாக சமூகவலைத்தளங்கள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில், இங்கு நபர் ஒருவர் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
அதாவது ராட்சத மர பீரோ ஒன்றினை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி அசால்ட்டாக கொண்டு சென்றுள்ளார். குறித்த காட்சியினை ஆரம்பத்திலிருந்து பார்க்கும் பார்கையாளர்களுக்கே மனம் திக் திக் என்று பதறுகின்றது.
ஆனாலும் கடைசியில் அசால்ட்டாக சாலையில் பீரோவுடன் பைக்கை ஓட்டிச் சென்று பார்வையாளர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார்.