Viral video: மின்னல் வேகத்தில் சென்ற Boat-எகிறி குதித்து கதிகலங்க செய்த முதலை- நீங்களே பாருங்க
கடலில் மின்னல் வேகத்தில் படகு சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் எகிறி குதித்து பயணிகளை கதிகலங்க செய்த முதலையின் காணொளி வைரலாகிறது.
அச்சம் கொள்ள வைக்கும் வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் நம்மை பயம் காட்டும் நிறைய காணொளிகள் பகிரப்படுகின்றன.
அந்த வகையில், கடலில் படகு சவாரி செய்து கொண்டிருந்த பயணிகளை பயம் காட்டும் வகையில், முதலையொன்று திடீரென தண்ணீர் உள்ளே இருந்து எகிறி குதிக்கிறது.
அத்துடன் பயணிகள் செல்லும் படகை பின் தொடர்ந்து கொண்டு, பின்னால் வருகிறது. இதனை படகிற்குள் இருக்கும் பயணியொருவர் காணொளியாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு மனிதரை அப்படியே விழுங்கும் அளவுக்கு பெரிய முதலையாக இருப்பதால் படகில் இருந்தவர்கள் அச்சம் கொள்கிறார்கள். அத்துடன் காணொளி நிறைவடைகிறது.
இந்த காணொளியை இணையவாசிகள், படகு சவாரி செய்ய ஆசையாக இருக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
Amazing footage of a massive 4.5 m (15ft) crocodile swimming alongside a boat in Australia captured by fisherman Alec Dunn. Saltwater crocodiles can swim up to 29 km/h (18 mph).pic.twitter.com/7AIpfvjKcH
— Wonder of Science (@wonderofscience) June 14, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |