என்ன தொகுப்பாளினி டிடி இப்படி இறங்கிட்டாங்களே! வைரலாகும் புகைப்படங்கள்
தொகுப்பாளினி டிடி தற்போது ட்ரெண்டடிங் லுக்கில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. 1999ம் ஆண்டு பள்ளி படிக்கும்போதே விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான அவர், முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனேயே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.
இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான். இது அவரின் அடையாளமாவே மாறியது. சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்துகொண்டவர்.
சில மாதங்டகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்ட டிடி, தற்போது அதிலிருந்து மீண்டும் அதே உத்வேகத்துடன் நிகழ்சிகளில் பங்கேற்று வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் செம ட்ரெண்டியான லுக்கில் டிடி தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |