வீட்டில் அரிசிமா இருக்கா? அப்போ வெறும் 10 நிமிடத்தில் மொறுமொறு முறுக்கு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் ஆனால் போதும் டீ குடிப்பதற்கு சிற்றுண்டிகளை செய்து தரச்சொல்லி சிறுவர்கள் நச்சரிக்க ஆரத்பித்து விடுவார்கள்.
அப்படியான நேரங்களில் விரைவாகவும் சுவையாகவும் அரிசிமாவை வைத்து எப்படி வெறும் பத்தே நிமிடங்களில் மொறு மொறுன்னு முறுக்கு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
எள்ளு - 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி,அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், எள்ளு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து, நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
அதனையடுத்து அதில் பச்சரிசி மாவை சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறிவிட வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, தட்டு கொண்டு 5 நிமிடங்கள் வரையில் நன்றான ஊறவிட வேண்டும்.
பின்னர் கைகளை தண்ணீரிலல் நனைத்துக் கொண்டு, மாவை நன்கு மென்மையாகும் வரை பிசைந்து கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து அதை நீளவாக்கில் மெல்லியதாக உருட்டிக் எடுத்து, ரிங் முறுக்கு வடிவத்தில் செய்து, ஒரு தட்டில் தனியான அடுக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ள ரிங் முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவு தான், அசத்தல் சுவையில் மொறு மொறு ரிங் முறுக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |