வெங்காயம், தக்காளி இல்லாத உடனடி சாம்பார் செய்வது எப்படி?
ஆரோக்கியமான காலை உணவு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது இட்லி, தோசை தான், அதிலும் சுடச்சுட சாம்பார் ஊற்றி, விதவிதமான சட்னிகளை வைத்து ருசித்தால் அதன் சுவையே அலாதி தான்.
அந்த வகையில் மிக எளிதாக வெங்காயம், தக்காளியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
* துவரம்பருப்பு
* புளி- நெல்லிக்காய் அளவு
* மிளகு, சீரகம்- தேவையான அளவு
* சாம்பார் பொடி- தேவையான அளவு
* மல்லித்தூள், மஞ்சள் தூள்- தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்ததும், மிளகு, சீரகத்தை முதலில் வறுத்தெடுத்துக் கொள்ளவும், இதனுடன் துவரம் பருப்பையும் சேர்த்து வறுக்கவும்.
நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும், பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வர மிளகாய், உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதில் பூண்டு சேர்த்த பின்னர், மஞ்சள் தூள்., மல்லித்தூள் சேர்த்து வதக்கவும், இதனுடன் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்.
7- 10 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சாம்பார் ரெடி!!!
செய்யும் போதே மணக்கும் தக்காளி குருமா...வெறும் 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்!