சுரைக்காயில் வடை செய்ததுண்டா? வெறும் 10 நிமிடத்தில் செய்திடலாம்
சுரைக்காய் இருந்தால் சுவையான வடையை வெறும் 10 நிமிடங்களில் செய்துவிடலாம். எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட சுரைக்காய் கோடை காலத்தில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டிய காயாகும். ஆனால் இதனை யாரும் அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
ஆனால் இதனை வடையாக செய்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். வெறும் 10 நிமிடத்தில் சுரைக்காயில் வடை எவ்வாறு சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1 கையளவு
உப்பு - சுவைக்கேற்ப
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி மாவு - 3/4 கப்
எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சுரைக்காயினை நன்றாக தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். பின்பு கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
பின்பு பாத்திரம் ஒன்றில் துருவிய சுரைக்காயை எடுத்துக் கொண்டு, அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
கடலை பருப்பு மற்றுமு் பாசி பருப்பை கொரகொரப்பாக அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான பச்சரிசி மாவு, கடலை மாவு, எள்ளி வதைகளை சேர்த்து நன்றாக பிசையவும்.
பின் ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து நடுவே வைத்து, தட்டையாக வடை போன்று தட்டி நடுவே ஒரு துளையிட வேண்டும்.
பின்பு வாணலியினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள வடையைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான சுரைக்காய் வடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |