தீராத கடன் தொல்லையை தீர்க்கும் வெற்றிலை - செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலும் கடன் வாங்கிவிட்டு திரும்ப கட்ட பெறும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கி விடுகின்றோம்.
கடனை வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதை சரிசெய்ய ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரம் உங்களுக்காக.
தேவையான பொருட்கள்;
அரச இலை 1, மஞ்சள் பிள்ளையார், வெட்டிவேர், நெல்மணி, அருகம்புல், வெற்றிலை.
முதலில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து, அரச இலையில் வைத்து, மஞ்சள் பிள்ளையாருக்கு குங்கும பொட்டு வைத்து, பூ வைத்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
இந்த மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்ததாக வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேனாவை எடுத்து அந்த வெற்றிலையில் உங்களது கடன் தொகையை எழுதி, அந்த கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று எழுதி விடுங்கள்.
அதன்பின் வெற்றிலையின் மேல் ஒரு துண்டு வெட்டிவேர், ஒரு ஸ்பூன் நெல்மணி, இரண்டு அருகம்புல், இந்த பொருட்களை வைத்து, இந்த வெற்றிலையை அப்படியே அரச இலையின் மேல் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாரின் முன்பு வைத்து விடுங்கள்.
இறுதியில், விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து உங்களுடைய வேண்டுதலை மனதார வைத்து, கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இதை வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து விட்டால் பழைய பொருட்களை எல்லாம் அகற்றி விட்டு, அடுத்த வாரம் மீண்டும் புதியதாக எல்லா பொருட்களையும் கொண்டுவந்து வைத்து தான் பூஜையில் வழிபாடு செய்யவேண்டும்.
நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய இந்த விநாயகர் வழிபாடு நமக்கு அரச வாழ்வை கொடுக்கும் என்பது நம்பிக்கை.