எரிமலையை சுற்றி வாழும் உயிரினங்கள் - உங்களுக்கு ஒன்றாவது தெரியுமா?
எரிமலை போன்ற சூடான இடக்களை சுற்றி வாழும் மிருகங்களின் தனித்துவ அம்சம் பற்றி பார்க்கலாம்.
எரிமலை பிரதேசங்களை சுற்றி வாழும் உயிரினங்கள்
இந்த எரிமலை சுற்றி வாழும் மிருகங்கள் மற்றைய மிருகங்களை விட மிகவும் வித்தியாசமாகும். இவற்றின் உயிர்வாழ்வாவதற்கான சில தனித்துவ அம்சங்கள் எரிமலை பிரதேசங்களை சுற்றி காணப்படுகின்றன. இதனாலேயே இவற்றை இயற்கையின் புத்திசாலித்தனமான உயிரினங்கள் என கூறுகிறார்கள்.
கலபகோஸ் கடல் உடும்பு
கடலில் உணவு தேடும் ஒரே பல்லி இனமான கடல் உடும்பு உள்ளது. எரிமலை அருகில் உள்ள கடலில் இவை பாசிகளை உண்பதற்காக வாழ்கின்றன. அதன் கருமையான தோல் குளிர்ந்த நீரில் மூழ்கிய பிறகு வெப்பத்தை விரைவாக உறிஞ்ச உதவுகிறது. இவற்றில் அதிக உப்புச்சுரப்பிகள் இருப்பதால் அதிகப்படியான உப்பை வெளியிடும்.
ஹவாய் கரும்புள்ளி லிம்பெட்
இந்த கடல் காஸ்ட்ரோபாட்கள் ஹவாயில் மட்டும் காணப்படும். எரிமலைக் கடற்கரைகளுக்கு அருகிலுள்ள பாறைகளுக்கு இடையேயான அலை மண்டலங்களில் வசித்து வருகின்றன. இவை பாசிகள் மற்றும் பிற கடல் உயிரினங்களை சாப்பிட்டு உயிர்வாழ்கின்றன. இவை சிற்பி இனங்களை சேர்ந்ததாக இருக்கலாம்.
எரிமலை முயல்
இந்த சிறிய முயல் இனம் மெக்சிகோவின் எரிமலைகளைச் சுற்றியுள்ள ஹைலேண்ட் பைன்-ஒக் காடுகளுக்குச் சொந்தமானது. இந்த சிறிய முயல் இனம், வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்குமிடம் மற்றும் பாதுகாப்பிற்காக எரிமலை பாறை பிளவுகளைப் பயன்படுத்துகிறது. வாழ்விட அழிவு மற்றும் சீரற்ற காலநிலையால் இது அழிந்து வரும் நிலையை எதிர்கொள்கிறது.
ஃபிளமிங்கோ
இந்த ஃபிளமிங்கோக்கள் லேக் நேட்ரான் போன்ற அதிக உப்புத்தன்மை கொண்ட ஏரிகளில் வசிக்கின்றன. மேலும் அத்தகைய சூழல்களில் நன்றாக வளரும் சயனோபாக்டீரியாவை உண்டு உயிர்வாழ்கின்றன. இதனால் சிறப்பு பரிணாம வளர்ச்சியைக் கொண்டுள்ளன. இது பெரும்பாலான உயிரினங்களுக்கு ஆபத்தான உப்புத்தன்மை மட்டத்தில் வாழும்.
வாம்பயர் கிரவுண்ட் பிஞ்ச்
கலபகோஸ் தீவுகளின் கொந்தளிப்பான நில பிரதேசத்தில் இவை உயிர் வாழ்கின்றன. இவை மிகவும் சிறிய பறவைகளாகும். இவை அதன் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடல் பறவைகளின் இரத்தத்தை குடிக்கும். இது உணவு பற்றாக்குறையாக இருந்தால் மட்டுமே செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |