மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! எலிகளுக்குமா? அதிர்ச்சியில் மக்கள்
மனிதர்களுக்கு மட்டுமின்றி எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது நியூயார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
இரண்டு ஆண்டுகள் உலகத்தை முழுவதும் தனது கட்டுக்குள் வைத்தது தான் கொரோனா தொற்று. ஆம் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதோடு, மக்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டிப்போட்டது.
பல உயிர்களை காவு வாங்கியதோடு, உறவினர்கள் சொந்தங்கள் கூட அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாத நிலையையும் ஏற்படுத்தியது.
கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாக குறைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
எலிக்கு கொரோனா தொற்று
தற்போது மனிதர்களுக்கு மட்டுமின்றி உயிரினங்களையும் தாக்கி வருவது தெரியவந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரில் சுற்றித் திரியும் எலிகளின் மேல் கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம் 79 எலிகளின் மேல் சோதனை நடத்தப்பட்டது. இதில் 16 எலிகளுக்கு ஒமைக்கிரான், ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எலிகளை போன்று மற்ற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.