தயவு செய்து இதை செய்யுங்கள்.. காமெடி நடிகர் கவுண்டமணி ட்விட்டரில் உருக்கம்!
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவி வேலையில், தமிழகத்தில் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.
தினசரி கொரோனாவால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா விழிப்புணர்வு கூறித்து பல பிரபலங்கள் பதிவிட்டு வரும் நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்!" என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்! pic.twitter.com/0fXTb7MCpb
— Goundamani (@itisGoundamani) May 22, 2021